POTHYS

POTHYS

திங்கள், 27 மார்ச், 2023

திங்கள், 18 மார்ச், 2013

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாணப் பெருவிழா, நேற்று அதிகாலை, கொடியேற்றத்துடன் கோலாகலமாக வங்கியது.காஞ்சிபுரத்தில் 23 ஏக்கர் பரப்பளவில், ஏகாம்பரநாதர் கோவில் அமைந்துள்ளது. சோழர், பல்லவர், விஜய நகர மன்னர்கள், திருப்பணி செய்து வழிபட்டுள்ளனர்.சிறப்பு வாய்ந்த ஏகாம்பரநாதர் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி மாதம், பங்குனி உத்திர திருக்கல்யாணப் பெருவிழா நடைபெறும். இந்த ஆண்டு விழா, நேற்று காலை 5:45 மணிக்கு, கொடியேற்றம் சிவாச்சாரியார்களின் முன்னிலையில் மேளதாளங்கள், அதிர்வேட்டுகள் முழங்க கோலாகலமாக நடந்தது. அதை தொடர்ந்து காலை 8:30 மணிக்கு பவழக்கால் சப்பரம், இரவு சுவாமி சிம்ம வாகனத்திலும், அம்பிகை கிளி வாகனத்திலும் அருள்பாலித்தனர்.இன்று காலை சூரியபிரபை, இரவு சுவாமி சந்திரபிரபை வாகனத்திலும், அம்பிகை அன்ன வாகனத்திலும், வீதியுலா வரும் நிகழ்ச்சியும், நாளை காலை பூத வாகனம், இரவு அம்பிகையுடன் ஏகாம்பரநாதர், சண்டிகேசுவரர் பவழக்கால் சப்பரங்களிலும், விநாயகர் வெள்ளி மூஷிகவாகனத்திலும், சுப்பிரமணியர் தங்கமயில் வாகனத்திலும், சின்ன காஞ்சிபுரம் மூன்றாம் திருவிழா மண்டபத்தில் எழுந்தருள்வர்.