POTHYS

POTHYS

புதன், 17 மார்ச், 2010

இரத்த காட்டெறிகள்

                                    
1 சமீப காலங்களில் சினிமாவைப் பற்றி எழுதி சிற்றிதழ்கள் பக்கத்தை ரொப்புகிறது.

2  இவை பெரு வணிக இதழ்களாக, புத்தகசந்தையில்,வாசகர்களின் சிலிர்ப்பை பயன்படுத்தி காசு பார்க்கும் நிறுவனங்களாக ஆகிவிட்டன.

3 தமிழ் சூழலில் விமர்சனபோக்கு தூக்கலாகவும், படைப்பாக்கம் குறைவாகவும் மலிந்து விட்ட நிலை உள்ளன.

4 சினிமா வாய்ப்பிற்க்காக கண்டவர்களை புகழ்ந்து, சில சினிமாக்களை மட்டம் தட்டி, பல சினிமாக்களை சரி என்று ஏற்றுக்கொண்டு, வசன வாய்ப்பையும் பாடல் வாய்ப்பையும், எதிர்பார்த்து காத்துகொண்டிருக்கிறார்கள்.

5 புகழ் வாய்ந்த பதிப்பகங்களை நசுக்கி புகழ்வானில்,பறக்க ஆசைபடுகின்றனர்.

6 நல்ல சினிமாவிற்கான தேடல்,மிதிபட்டு டவுன்லோடு எழுத்து, டவுன்லோடு சினிமாக்களை பரப்பி விடுகின்றன.
7 குடி அரசியல் மிகுந்து, எழுத்தாளர்கள் செய்யும் காரியங்கள் பிரதான பாத்திரம் ஆக்கப்படுகின்றன.
8 நீலப்புரட்சி வேறு நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது, நான் லீனர் எழுத்து உட்பட.
9 தமிழ் மடிந்து,ஈழம் மடிந்து, பத்திரிகை சுதந்திரம் மடிந்து, காசு பொறுக்கி அரசியல் வந்துவிட்டது.
10 செம்மொழி மாநடுகள், எழுத்தாளர்களை பலிகடா ஆக்கி ரேசன் கடை அரசியலை முன்வைக்கிறது கழக ஆட்சிகள்.
11 எது இலக்கியம்? எது சினிமா? வேகமான வாழ்வியலில், தனிமைகள் வென்றுஎடுக்க கணநேர சிலிர்ப்புகள் ஆதிக்கம் பெற்றுள்ளதில், நாம் ஓரு கணம் நம்முடைய காலடி தடத்தில் ஏற்பட்டுள்ள ரேகை மாற்றங்கள் அவசியம் நிதானத்துடன் உணர்வோமாக,
12 புலப் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் ஒரு போக்கையும், தமிழ்நாட்டில் வேறொரு சூழலையும் அலகாக பயன்படுத்தி காசு பார்க்கும் பார்பன கும்பல் பலம்பெறுகிறது. சிந்தனை மரபு தேய்ந்து, அனைத்தையும் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நீரியல் போக்கு ஏற்படுத்துகின்றனர்.
13 சார்புநிலை எழுத்து, எவரும் கோபித்துக் கொள்ளாத எழுத்து, சமநிலை எழுத்து, என சமரசம் கொண்ட நிலைகளை புறந்தள்ளி சிற்றிதழ்கள்--நிஜ சிற்றிதழ்களாக மாற பகுத்தறிவு கரங்கள் நீளூமோ?

                                                                                                                                                                                                              
                                                                                                                                                                                                                   வெ.நா-வின் இலக்கிய வட்டம்
செயலர்